ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, இனி ஹாக்கி ஜாம்பவான் பெயரில் மாற்றம் : பிரதமர் மோடி

By 
Rajiv Gandhi Kale Ratna Award, now changed to hockey legend PM Modi

ராஜீவ்காந்தி கேல் ரத்னா என்ற பெயரில், விளையாட்டுத்துறையில் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. 

ஆனால், வரும் காலங்களில் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில், கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார்.

விளையாட்டுத்துறைக்கான கேல் ரத்னா விருது, ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும்.

நாடு முழுவதும், பலர் கோரிக்கை வைத்ததை ஏற்று, ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து ' தலைவர் பெயரை மறைத்து, வரலாற்றை அழிக்கலாம் என நினைத்தால், அது நடக்காது' என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். 

மேலும், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றி வரலாற்றை அழிக்க நினைக்கிறார்கள்' என்றார்

Share this story