வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி கொள்ளை : போலீசார் தீவிர விசாரணை..

* ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் சுதர்சன். இவர் புதிய வீடு வாங்குவதற்காக ரூ.2.80 கோடி பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில், வீட்டின் கதவை உடைத்து 2.80 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். பணம் கொள்ளை போனது குறித்து, கோபிசெட்டிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மத்திய பிரதேச மாநிலம், புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள நேபாநகர் காவல் நிலையம் மீது ஒரு கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. காவலர்களை தாக்கியதுடன் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.
மேலும், காவல் நிலைய லாக்கப்பில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 குற்றவாளிகளை விடுவித்தனர். சுமார் 60 பேர் ஒன்றுதிரண்டு வந்து தாக்கியதால் காவலர்கள் திக்குமுக்காடினர். வன்முறைக் கும்பலை தடுக்க முடியாமல் திணறினர்.
இந்த தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.