செப்டம்பர் 30-ந்தேதிக்கு பிறகு, ரூ.2,000 நோட்டு செல்லாது : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

By 
rbi

இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. மேலும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

இந்நிலையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது. - மே 23 ஆம் தேதி முதல் பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். பொது மக்கள் ஒரே சமயத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். -

ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு உகந்ததாகவே இருக்கும். 
 

Share this story