ரூ.300 கோடி வரி ஏய்ப்பு : எம்.பி.க்கு நோட்டீஸ்..

By 
Rs 300 crore tax evasion Notice to MP ..

300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக, ஆந்திர எம்.பி அயோத்தி ராமி ரெட்டி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ராம்கி குழுமத்தின் தலைவரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி  கட்சியின் மாநிலங்களவை எம்.பியுமான  ராமி ரெட்டி, தனது நிறுவனங்கள் லாபம் இன்றி, நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி போலி ஆவணங்கள் மூலம் 1,200 கோடி ரூபாய்க்கு நஷ்டக் கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், இந்தக் குழுமம் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் பங்குகளை வாங்கி அதிக வருவாய் ஈட்டியதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஜூலை 6 ம் தேதி 15 இடங்களில் சோதனை நடத்தினர். 

அதில் கிடைத்த ஆவணங்களின் படி,  ராமி ரெட்டி 300 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share this story