ரஷ்யா அதிரடி தாக்குதல் : 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி உக்ரைன் பதிலடி..

warr

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் சண்டை நீடிக்கிறது.

ஆரம்பத்தில் உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கி முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷிய படைகள், பின்னர் முன்னேறி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் தாக்கின. மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

அவ்வகையில் நேற்று இரவு உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை உக்ரைன் வான் பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளன.

கீவ் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அழித்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

Share this story