3 ஆண்டு சிறைக்குப் பின், சவுதி இளவரசி விடுதலை

Saudi princess released after 3 years in prison

சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2019 மார்ச் மாதத்தில் மருத்துவ சிகிச்சைக்காக, சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு, விமான நிலையம் செல்லும் நிலையில், இளவரசி பாஸ்மா சவுத் கைது செய்யப்பட்டார்.

வேண்டுகோள் :

'உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும்' என சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதி அரேபிய இளவரசி பாஸ்மா மற்றும் அவரது மகள் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

பெண்ணுரிமை :

மேலும், தடுப்புக் காவலில் இருந்தபோதும், அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என அங்குள்ள மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

இவர், பெண்களின் உரிமைகளுக்காக, சவுதியில் தொடர் போராட்டங்கள் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story