பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து, 3 மாணவர்கள் பரிதாப உயிரிழப்பு
 

School building collapses, 3 students tragically killed

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் பொருட்காட்சி திடல் அருகே டவுன் சாப்டர் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. 

உயிரிழப்பு :

இதில், கழிவறைச்சுவர் அருகே நின்றுகொண்டிருந்த 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், 3 மாணவர்கள் படுகாயமங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், கட்டிட விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். 

இதனால், பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

போராட்டம் :
 
கழிவறைச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்ததையடுத்து, சக மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியும், சாலையில் மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தால் நெல்லை டவுன் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
*

Share this story