தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை..

By 
5days

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆகையால் தமிழகத்தில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 15 முதல் 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ள காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Share this story