பாடகி பவதாரிணி மறைவுக்கு, இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்..

By 
bhavatharini

இளையராஜா மகள் பவதாரிணி புற்றுநோயால் போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக, அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல பாடகி மற்றும் இசையமைப்பாளர் பவதாரிணி மறைவுக்கு பல துறையை சேர்ந்த பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பவதாரிணி மறைவு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இளையராஜா குடும்பத்திற்கு தனது ஆறுதல்களை கூறியுள்ளார். 

பிரபல பாடகி சின்மயி வெளியிட்ட பதிவில், தனக்கு அறிமுகம் மிக சிறந்த பெண்களில் ஒருவர் பவதாரிணி என்று கூறியுள்ளார். இளையராஜா, கார்த்திக் ராஜா மற்றும் யுவனுக்கு தனது ஆறுதல்களை கூறியுள்ளார்.

இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்ட பதிவில், சகோதரி பவதாரிணி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், அவரது குடும்பத்தாருக்கு அறுதல்களையும் கூறியுள்ளார். 

அதே போல பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவில், மறைந்த பாடகி பாவதாரிணிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் தனது இரங்கலை பாவதாரிணிக்கு தெரிவித்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சிம்பு தனது ஆறுதல்களை யுவன் சங்கர் ராஜாவிற்கு கூறியுள்ளார். பாவதாரிணியுடன் பணியாற்றிய நினைவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.  

மேலும், பல பிரபலங்களும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பவதாரிணியின் உடல் இன்று சென்னை கொண்டுவரப்படுகிறது.

Share this story