ரசிகர்கள் மீது மைக்கை வீசி எறிந்த பாடகி : பரபரப்பு நிகழ்வு..

By 
card

அமெரிக்காவில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி மேடையில் நடனமுடன் பாடிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்களின் அருகே வந்து பாடினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்டி பி தான் வைத்திருந்த மைக்கை அவர்களை நோக்கி வீசி எறிந்தார். இதையடுத்து, பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களைச் சுற்றி வளைத்தனர்.

அதன்பின் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கார்டி பி மீது ஒருவர் குளிர்பானத்தை வீசி தாக்கினாரா? அல்லது கும்பலாகச் சேர்ந்து இளைஞர்கள் தாக்கினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.

கடந்த மாதம் வேல்சில் நடந்த நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த கார்டி பி மீது ரோஜா பூங்கொத்துகளை ரசிகர்கள் வீசி எறிந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share this story