மோடிக்கு எதிராக கோஷங்கள்.. சிதைக்கப்பட்ட இந்து கோவில் - என்ன நடந்தது? முழு விவரம்..

By 
for

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் உள்ளது தான் நெவார்க்கின் ஸ்வாமிநாராயண் மந்திர். காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் மற்றும் இந்தியாவுக்கு எதிராகவும் கோவிலின் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும் கோவில் சில பகுதிகளும் சிதைக்கப்பட்டுள்ளதாக இந்து-அமெரிக்கன் அறக்கட்டளையால் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

கோவிலின் பல சுவர்களில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வாசகங்கள் மற்றும் படங்கள் காட்டப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்தவும், "வன்முறை பயத்தை" உருவாக்கவும் வெறுப்பூட்டும் செய்திகள் எழுதப்பட்டிருக்கலாம் என்று இந்து அமெரிக்கன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக நெவார்க் காவல் துறை மற்றும் நீதித்துறை சிவில் உரிமைகள் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

"கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள SMVS ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சிதைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சம்பவம் இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் நாசகாரர்கள் மீது விரைவான விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும்" என்று இந்திய தூதரகம் Xல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள SMVS ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சிதைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சம்பவம் இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளால் விரைவான விசாரணை மற்றும் இந்த காழ்ப்புணர்ச்சியாளர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்துள்ளோம் என்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் X பக்கத்தில் கூறியுள்ளது. 

கடந்த காலங்களில் அமெரிக்காவிலும் அதன் அண்டை நாடான கனடாவிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால், ஒரு இந்து கோவில் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்று கூறப்படுகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரிவினைவாத உணர்வைத் தூண்ட முயற்சிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியா முன்னதாகவே கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story