உயிருக்கு எமனாகும் ஸ்மோக் பிஸ்கட்; டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை.! - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.. 

By 
smoke

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மோகன் ஜி ஸ்மோக் பிஸ்கட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்தும் விதமாக அவர் அதிர்ச்சி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில்,

ஸ்மோக் பிஸ்கட் ஒன்ற ஆர்வத்துடன் வாங்கி உட்கொள்ளும் சிறுவன் ஒருவன், சில நிமிடங்களிலேயே வலியால் துடிக்கிறான். பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோவுடன் முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் இயக்குனர் மோகன் ஜி வைத்திருந்தார். 

அதில், இது போன்று விற்கும் ஸ்மோக் பிஸ்கட் என்ற தின்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள். அதில் ஊற்றப்படுவது லிக்விட் நைட்ரஜன், ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ஸ்மோக் பிஸ்கட்டை(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம். திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கிறது.

மேலும், உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம்' எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

Share this story