உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

By 
Special buses from Chennai for local elections

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெறுகிறது. 

இதையொட்டி, நேற்று சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

250 பஸ்கள் :

விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில், 250 பஸ்கள் அதிகாலை 2.30 மணிவரை இயக்கப்பட்டது. 

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செஞ்சி, திருக்கோவிலூர், ஆரணி, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

9-ந்தேதி :

இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க வசதியாக கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 250 பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2.30 மணிவரை மக்கள் அதிகளவு வந்ததால், அவர்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, வருகிற 9-ந் தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு, 8-ந் தேதி மாலை முதல் 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்களும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் இருந்து 200 பஸ்களும் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக பஸ்களை இயக்கவும் தயாராகி வருவதாக போக்குவரத்து வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

Share this story