ஸ்ரீதேவி மரணம் பற்றி கணவர் போனி கபூர் கூறிய புதிய தகவல்..

By 
devi3

போனி கபூர் கூறுகையில், "இது இயற்கை மரணம் அல்ல. விபத்து. மரணத்திற்குப் பிறகு நடந்த விசாரணையின் போது சுமார் 24 முதல் 48 மணிநேரம் இதைப் பற்றியே பேசியதால் அதன்பிறகு இதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

உண்மையில், அதிகாரிகள் என்னிடம் கூறுகையில், இந்திய ஊடகங்களின் அழுத்தத்தின் பெயரில் தான் அவர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று கூறினர். பிறகு ஸ்ரீதேவி கொல்லப்படவில்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அதிகாரிகள் தன்னை உண்மை கண்டறியும் சோதனைக்கும் உட்படுத்தினர்.

அவர் குளியலறையில் கீழே விழுந்ததால் அவரது முன்பல் ஒன்று உடைந்தது என்றும், அதற்குச் செயற்கை கேப் ஒன்று வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார். ஸ்ரீதேவி திரையில் தனது உருவத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுபவராக இருந்தார். அவர் இறப்பதற்கு முன்பு டயட்டில் இருந்தார். அவருக்கு அடிக்கடி பசியெடுத்தது. அவர் எப்போதும் திரையில் அழகாக இருக்க விரும்பினார்.

திருமணத்திற்குப் பிறகு பல சந்தர்ப்பங்களில், ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அவருக்கு 'குறைந்த ரத்த அழுத்தம்' இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும் போனி கபூர் கூறினார்.

போனி கபூர் மேலும் கூறுகையில், “உப்பு உடலில் தண்ணீரைத் தக்கவைத்து, உங்களை குண்டாகக் காட்டுவதாக பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருந்தது. உப்பை முழுவதுமாக கைவிட வேண்டாம் என்று நான் சொன்னேன். சாலட் சாப்பிடும் போது அதில் சிறிது உப்பு தூவி சாப்பிடச் சொன்னேன். ஆனால் அவர் அப்போது தான் நடித்துக் கொண்டிருந்த படங்களுக்காக அப்படிச் செய்வதாகச் சொன்னார்,” என்றார்.

Share this story