தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை : கல்வித்துறை அறிவிப்பு

Strict action against non-vaccinated teachers Academic Notice


கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, அங்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கேரள கல்வித்துறை அறிவித்திருந்தது.

புகார்கள் :

பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆன நிலையில், இன்னும் பல ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என புகார்கள் கிளம்பியது. 

இது பற்றி கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறியதாவது :

கேரளாவில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் பல ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

தடுப்பூசி போட தயாராக இல்லாத ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.உடல் நலக்குறைவு காரணமாக, தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பற்றி ஆய்வு செய்ய மருத்துவ நல வாரியம் அமைக்கப்படும். 

மருத்துவ குழுவிடம் அனுமதி பெறாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினால், அத்தகையோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் உத்தரவு :

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு அரசின் இலவச மருத்துவ வசதிகள் கிடைக்காது என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

இதுபோல, தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் ஒவ்வொரு வாரமும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், அவர்கள் கொரோனா இல்லை என்ற ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

Share this story