பேச்சு வார்த்தைக்கு வராவிட்டால் வேலை நிறுத்தம் நிச்சயம்: அமைச்சர் சிவசங்கருக்கு, போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டனம்..

By 
trtr2

போக்குவரத்து தொழிலாளர்கள் 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார். 

இதனை அடுத்து, போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இதனை அடுத்து அதிருப்தி அடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்று விட்டு, அமைச்சர் வராதது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தனர்.
 
மேலும் பேச்சு வார்த்தைக்கு வருவதாக கூறிவிட்டு அமைச்சர் வராதது கண்டிக்கத்தக்கது. பேச்சு வார்த்தைக்கு வராவிட்டால் வேலை நிறுத்தம் நிச்சயம் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this story