மாணவர்களே! இதோ.. கல்வி, தொழில் பற்றிய வழிகாட்டுதல் முகாம் : பயன் பெறுங்கள்; முழு விவரம்..

இந்த கல்வி கண்காட்சியின் பிளாட்டினம் ஸ்பான்சராக எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (திருச்சிராப்பள்ளி) மற்றும் அசோசியேட் ஸ்பான்சர்களாக வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப உயர் கல்வி நிறுவனம், அமெட் கடல் சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி, ராஜலக்ஷ்மி தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகம் ஆகியவை தினத்தந்தி நாளிதழுடன் இணைந்து நடத்தி சிறப்பிக்க உள்ளன. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் முழுமையாக பயன்பெறும் பொருட்டு மருத்துவம், பொறியியல், வணிகவியல், நிர்வாகவியல் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அனுபவமிக்க கல்வியியல் ஆலோசகர்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.
எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த கல்வி கண்காட்சி விடைகொடுக்க காத்திருக்கிறது. பொதுவான தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் பற்றிய அனைத்து விவரங்களையும் மாணவர்கள் கேட்டுப் பெறலாம். வேலை வாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்
படிப்பு முடித்ததும், வேலை அல்லது படிக்கும்போதே வேலை, படிக்கின்ற கல்லூரியிலிருந்து முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவது, இதுதான் இன்றைய பெற்றோர்களும் மாணவர்களும் பெரிதும் விரும்புகின்றனர் என்றால் ஐயமில்லை.
இதற்கு ஏற்ப, இந்த கல்விக் கண்காட்சியில் பொறியியல் படிப்புகளில் எந்த வகை படிப்புகள் உடனடி வேலைவாய்ப்பு கொடுக்கும் என்பது முதற்கொண்டு அரசு உயர் பணிகளில் சேருவதற்கு எந்த படிப்பை கல்லூரியில் படிக்க ஆரம்பித்து போட்டித்தேர்வுக்கு தயாராவது என்பதுவரை தகவல்களை இக்கண்காட்சியில் பெற முடியும்.
அதாவது கல்வி கட்டணம், பாட முறை, பயிற்றுவிக்கும் முறை, கல்லூரியில் இருக்கும் இதர வசதிகள், விடுதி வசதி, மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள், அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை பயிற்சி கூடங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஒருங்கே இந்த கண்காட்சியில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.