படிப்புதான் முக்கியம் : தமிழ் பாடத்தில் 9 பேர் 100-க்கு100

 

plus1

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

* 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.

* 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.

* ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

* இயற்பியலில் 440 பேரும், வேதியியல் 107 பேரும், உயிரியல் 65 பேரும், தாவரவியல் 15 பேரும், விலங்கியல் 34 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 

Share this story