நாளை சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து..

By 
etrain1

நாளை பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இரு மார்க்கமும் இயக்கப்படும் 44 புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட இருக்கின்றது. கோடம்பாக்கம் முதல் தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் நடைபெறவிருக்கும் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு இந்த ரயில் சேவை ரத்தானது அமலில் இருக்கும்.

இது குறித்த அறிக்கையை தற்பொழுது வெளியிட்டுள்ள தென்னக ரயில்வே, நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடங்களில் மின்சார ரவைகள் இயக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இன்று பிப்ரவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை இரவு 10.45 மணி முதல் காலை 4:30 மணிவரை சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளது. 

இரவு நேரங்களில் அதிக அளவில் பராமரிப்பு படங்களை மேற்கொள்ளமுடியும் என்பதால் இந்த சேவை நிறுத்தம் செய்யப்படுகின்றது. ஆகையால் இன்று முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான ரயில் சேவைகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story