சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து.! விவரம்... 

By 
tamparam

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் மே 18,19 தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் என பல்வேறு பகுதிகளுக்கு இந்த புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் மே 18,19 தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாகக் கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 ரயில்கள், மே 18, 19 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் 8 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.

Share this story