தமிழ்நாடே மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறது: பிரதமர் மோடி பதிவு..

By 
enn2

தமிழ்நாடே மிகுந்த நம்பிக்கையோடு பாஜகவை எதிர்பார்க்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்டது என் மண் என் மக்கள் என்ற நடைபயணம்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தமிழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடைபயணம் திருப்பூரில்  நிறைவடைந்தது.
 
இந்த  நடைபயணத்தின் நிறைவு விழாவாகவும், மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் பிரசார தொடக்கமாகவும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில்  நடந்தது. பிரதமர் மோடி, அண்ணாமலை, தமிழருவி மணியன் உள்ளிட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.
 
இந்த நிகழ்ச்சியில்   காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன், தமிழ்நாடு பாஜக தலைவர்  அண்ணாமலை ஆகியோர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி,  2024 ல் அதிகமாகப் பேசப்படும் கட்சியாக பாஜக உள்ளது. தமிழ் நாட்டின் இளைய தலைவர் அண்ணாமலைக்கு என் வாழ்த்துகள். தமிழ் நாட்டில் கொங்கு மண்டலம் தான் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழ் நாட்டுடனான எனது தொடர்பு அரசியல் சார்ந்தது அல்ல. அது இதயப்பூர்வமானது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு மதுரைக்கு சென்றார். இந்நிலையில், பிரதமர் மோடி தன் வலைதள பக்கத்தில்,

''நமது கட்சியின் கடின உழைப்பு களத்தில் தெரிகிறது, தமிழ்நாடே மிகுந்த நம்பிக்கையோடு பாஜகவை எதிர்பார்க்கிறது. பாஜகவால் மட்டுமே அவர்களின் கனவுகளை நனவாக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்'' என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சி பற்றியும் பிரதமர் மோடி மற்றும்  பாஜகவின் சாதனைகளைப் பற்றியும் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ''பாராளுமன்றத் தேர்தல், வளர்ச்சிப் பாதையிலான, சாமானிய மக்களுக்கான, நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல். 

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, அவர் மீது மிகுந்த பற்று கொண்ட தமிழக மக்கள், தங்கள் முழு அன்பையும் ஆதரவையும் வழங்குவார்கள் என்பது உறுதி ''என்று தெரிவித்துள்ளார்.

Share this story