மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதைத் தடுக்க, தமிழக போக்குவரத்துத்துறை நடவடிக்கை..

By 
Tamil Nadu Transport Department to prevent students from traveling up stairs ..

அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, அரசு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :

அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால், ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

தணிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது, மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும். பஸ்சில் போதிய இடவசதி ஏற்படுத்திக் கொடுத்து, படிக்கட்டில் நிற்காதாவாறு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்கள் படிகட்டிகளில் நின்று பயணம் செய்யாதவாறு ஓட்டுனரும், நடத்துனரும் பணியாற்ற வேண்டும். மாணவர்கள், மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் பஸ்களை இயக்க ஏதுவாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க, போக்குவரத்துத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
*

Share this story