தமிழ்நாட்டு வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி : பிரதமர் மோடி உரை
Sun, 9 Apr 2023

பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
வணக்கம், தமிழ்நாடு என உரையை தொடங்கினார். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் புத்தாண்டில் தமிழ்நாடு மக்களுக்கு பயன் தர உள்ளன.
தமிழ்ப் புத்தாண்டு புதிய திட்டங்களின் தொடக்கமாக அமையும். தமிழகம் சிறந்த சாலை கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக உள்ளது. புதிய திட்டங்களால் சென்னை, மதுரை, கோவை நகரங்கள் நேரடியாக பயன்பெறும்.
கட்டுமானங்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தின் பண்பாட்டை பிரதிபலிக்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எப்போதெல்லாம் தமிழ்நாடு வளர்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா வளர்கிறது என தெரிவித்தார்.