இன்ஸ்டா நண்பனை நம்பி சென்ற இளம்பெண் கூட்டு பலாத்காரம்.! வீடியோவை வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பிய இளைஞர்கள்..

By 
insta2

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (20). இவர் எந்நேரமும் சமூகவலைதளங்களில் இருப்பதை வாடிக்கையாக இருந்துள்ளார் குறிப்பாக இன்ஸ்டாகிராமில். 

இந்நிலையில், இவருக்கு 19 வயதான இளம்பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். இதனையடுத்து இருவரும் தங்களுடைய செல்போன் நெம்பரை பகிர்ந்து கொண்டு நெருங்கி பழகி வந்துள்ளார். ஒருமுறை அந்த பெண்ணுக்கு போன் செய்த சந்துரு தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி அந்த பெண்ணும் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது வீட்டில் சந்துருவின் நண்பர்களான தனுஷ் (20), சக்தி (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இதனை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக  யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. நிச்சயமும் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எடுத்த ஆபாச வீடியோவை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத மாப்பிள்ளை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், திருமணம் நின்று போனது. 

இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகிய இளம்பெண்ணை நைசாக பேசி வீட்டுக்கு வரழைத்து கூட்டு பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வருங்கால மாப்பிள்ளைக்கு அனுப்பி மிரட்டிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Share this story