தமிழகத்தில் வெப்பநிலை நிலவரம் : வானிலை மையம் தகவல்..

heat

தமிழகத்தில் இன்று (14.04.2023) மற்றும் நாளை (15.04.2023) ஆகிய இரண்டு நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் 14 முதல் 17 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும்,

18 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 24-மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story