லின்-இன் காதலியை தீர்த்துக்கட்டிய காதலன் : காரணம் என்ன?

மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் நலசோப்ரா நகரில் விஜய் நகர் பகுதியில் சீதா சதன் குடியிருப்பில் லிவ்-இன் முறையில் ஹர்தீக் ஷா என்ற 27 வயது வாலிபரும், மேகா தனசிங் தோர்வி என்ற 35 வயது பெண்ணும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்து உள்ளனர்.
அவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் என்றும் வீட்டு உரிமையாளர் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களிடம் தங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என கூறியுள்ளனர்.
இந்நிலையில், அந்த பிளாட்டில் இருந்து அழுகிய நிலையில் வாடை வந்து உள்ளது. உடனடியாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீசில் தெரிவித்து உள்ளனர். போலீசார் அந்த வாடகை வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில், படுக்கைக்கு கீழே மேகாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மூத்த காவல் ஆய்வாளர் ஷைலேந்திரா நாகர்கர் கூறும்போது, "கடந்த வாரம் மேகா கொல்லப்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது" என கூறியுள்ளார். அவருடன் ஒன்றாக லிவ்- இன் முறையில் வசித்து வந்த ஹர்தீக் ஷா தப்பி செல்ல முயன்று உள்ளார். அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் வேலையில்லாமல் இருந்து உள்ளார். இதனால், அந்த ஜோடிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதுபோன்று ஒரு முறை சண்டை நடக்கும்போது, மேகாவை அவர் கொலை செய்துவிட்டார். ஆனால், எந்த தேதியில் சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், இதுபற்றி தனது சகோதரிக்கு ஹர்தீக் குறுஞ்செய்தி அனுப்பி தகவல் தெரிவித்து உள்ளார். தப்பி செல்வதற்கு முன் பிளாட்டில் இருந்த நாற்காலி உள்ளிட்ட மர பொருட்களை அவர் விற்று உள்ளார். இதுபற்றி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.