சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..

By 
rain41

வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதே போல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. ஏற்கனவே வருகிற 28, 29-ந் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 

Share this story