15 வயது சிறுவனை கொலைகாரனாக்கிய தந்தையின் குடி பழக்கம்; பரபரப்பு சம்பவம்..

By 
sirar

தூத்துக்குடி செல் சீனி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி அனுசியா. இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்து வரும் சத்தியமூர்த்தி தினமும் மது அருந்திவிட்டு, தனது மனைவி அனுசியாவை அடித்து துன்புறுத்துவதுடன் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று, நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சத்தியமூர்த்தி தனது மனைவி அனுசியாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதன் காரணமாக, ஆத்திரமடைந்த அவரது 15 வயது மூத்த மகன் வீட்டில் இருந்த  அரிவாளை எடுத்து தந்தை சத்தியமூர்த்தியை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, தென்பாகம் காவல்துறையினர் தந்தையை கொலை செய்த இளம்சிறாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மது போதையில் தாயை துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்து சிறுவன் தந்தையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story