மாணவர் சஞ்சய் பெற்றோருக்கு, முதல்வர் நிதி வழங்க வேண்டும்: அ.திருமலை கோரிக்கை 

By 
san1

திரைப்படக் கல்லூரி மாணவர் சஞ்சய் மரணம் தொடர்பாக, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தமிழறிஞரும் சமூக ஆர்வலருமான அ.திருமலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் (வயது 22). இவர், சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் நான்காவது ஆண்டு (பிவிஏ) படித்து வந்தார்; 

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் மாரடைப்பால் யாரும் எதிர்பாராத வகையில் அவரது சொந்த ஊரில் மரணம் அடைந்தார்; அவருடன் படித்து வந்த மாணவர்கள், நேரில் சென்று, மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதோடு, இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டார்கள்;

ஆனால் அவரது மரணத்தை திரைப்படக் கல்லூரி ஆசிரியர்களோ சம்பந்தப்பட்ட  திரைப்படக் கல்லூரி நிர்வாகமோ அமைச்சரோ எவ்வித இரங்கலும் தெரிவிக்காதது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது;

மாணவர் சஞ்சய் படித்து வேலைக்குப் போய்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் மாணவரது பெற்றோரும் இருக்கிறார்கள்; 

எனவே, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரிய விசாரணை நடத்தி, மாணவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு உரிய நிதி உதவி வழங்கி, தகுந்த ஆணை பிறப்பித்திட தமிழறிஞர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;

இவ்வாறு தமிழறிஞரும் சமூக ஆர்வலருமான அ.திருமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

Share this story