போதைப்பொருள் கடத்தியது இப்படித்தான்.! வெளிச்சத்துக்கு வந்த அதிர வைக்கும் ரகசியம்..

By 
jafer3

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிடும் விசாரணை நடத்தி வரும் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அவருக்கு தொடர்புடைய நபர்களை கைது செய்து வருகிறது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜாபர் சாதிக்கிடும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிஸ்னஸில் முதலீடு செய்தது அம்பலமாகியுள்ளது. 

இந்நிலையில், ஜாபர் சாதிக்கை 7 நாள் காவலில் எடுத்தும் என்சிபி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் ஜாபர் சாதிக்கிற்கு யார் யாருடன் தொடர்பு, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்வது யார் என என்சிபி துருவிதுருவி விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில் ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய கூட்டாளியான சதா என்ற சதானந்தம் என்பவரை கைது செய்துள்ளது. இவர் திருச்சியிலும், சென்னையிலும் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார். ஆனால், இந்த நிறுவனங்கள் மூலமாக சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தி இருப்பது அம்பலமாகியுள்ளது. 

பத்தாண்டுகளுக்கு மேலாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் சதானந்தம் தான் சென்னை நெட்வொர்க்கிற்கு லெஃப்ட் ரைட் எனவும் கூறப்படுகிறது. தேங்காய் பவுடர், ராகி பவுடர்களுக்கு இடையே போதை மருந்தை கலந்து யாருக்குமே சந்தேகமே வராத அளவிற்கு பேக்கிங் செய்து அனுப்பும் வேலையை சதானந்தம் தான் செய்து வந்ததாக கூறப்படுகிறது. யார் மூலமாக அனுப்ப வேண்டும் எந்தெந்த வழியாக சரக்கு செல்ல வேண்டும் என பிளான் போடுவது எல்லாம் சதானந்தம் தான்.

சென்னையில் வைத்து சதானந்தத்தை கைது செய்திருக்கும் என்சிபி அதிகாரிகள் பநீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே சதானந்தம் மீது சென்னையில் மூன்று போதைப்பொருள் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 3000 கோடி ரூபாய் போதைப் பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் உட்பட  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் என்சிபி யின் விசாரணை தீவிரமாகி இருப்பதால் இன்னும் பலர் சிக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்துள்ளது என்சிபி. நீதிமன்ற அனுமதியோடு சென்னை அழைத்து வந்த அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து ஜாபர் சாதிக்கிடும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய திருப்பமாக போதைப் பொருளில் கிடைத்த பணத்தை சில சமூக அமைப்புகளுக்கும் ஜாபர் சாதிக் விநியோகித்ததாக சொல்லப்படும் நிலையில் அந்த பணம் வேறு ஏதேனும் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்ஐஏவும் ஜாபர் சாதிக்கின் விவரங்களை கோரியுள்ளது. 

ஜாபர் சாதிக்கின் வழக்கு தொடர்பாக தற்போதைய ஆவணங்கள் பழைய வழக்கு ஆவணங்கள் என மொத்த வரலாற்றையும் என்ஐஏ சேகரித்து வருகிறது. ஜாபர் சாதிக் தொடர்புடைய வங்கி கணக்குகள் பணம் பரிவர்த்தனைகளையும் என்ஐஏ சேகரிக்கும் நிலையில் விரைவில் இந்த வழக்கை என்ஐஏ கையிலேடுக்கக்கூடும் என்ற தகவலும் கிடைத்துள்ளது. 

Share this story