கொரோனாவை விட, ஆண்டுக்கு இதனால், ஒன்றரை லட்சம் பேர் பலி : நிதின் கட்கரி

By 
Thus, one and a half lakh people are killed every year, more than Corona Nitin Gadkari

வாகன விபத்து ம​ற்​றும் பாதுகாப்பு பற்றிய காணொலிக் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய நிதின் கட்கரி கூறியதாவது :  

இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில், அதிகளவிலான சாலை விபத்துகள் ஏற்படுகிறது.  

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இது கொரோனா மரணங்களை விட அதிகம். உயிரிழப்பவர்களில் 60 சதவீத பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகன போக்குவரத்து பாதுகாப்பு தான் இப்போதைய தேவை. 

2030 ஆம் ஆண்டுக்குள் எந்த விபத்து மற்றும் இறப்புகள் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். உலகளவில் வாகன பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் சாலை பொறியியல் தொழில்நுட்பம் மிகப் பெரியளவில் மேம்பட்டுள்ளது.

ஓட்டுநர்களுக்கான சிறந்த பயிற்சி, மேம்பட்ட பயிற்சி மையங்கள் ஆகியவை முக்கியம், நல்ல சாலைகளை உருவாக்கி, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது எனது தார்மீக பொறுப்பு' என்றார். 

மேலும், நமது இலக்கை அடைய, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் நிதின்கட்கரி கூறினார்.

Share this story