இன்று, ஜூடோ கலையின் தந்தை பிறந்த தினம் : கூகுள், டூடுலில் பதிந்து மரியாதை

Today is the birthday of the father of the art of judo Google, Doodle in honor

ஜூடோ தற்காப்பு கலையின் தந்தையான கனோ ஜிகோரோவின் 161-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஜூடோ தற்காப்பு கலையின் தந்தையான பேராசிரியர் ஜிகோரோவின் 161- வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம், தனது டூடுல் மூலம், அவரை குறித்த படத்தொகுப்பை வைத்து கவுரவித்துள்ளது.

வாழ்க்கை :

கனோ ஜிகோரோ ஷிஹான்(1860-1938), 1860ம்  ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி,  ஜப்பான் நாட்டிலுள்ள மிகாகேவில் பிறந்தார். 

தன்னுடைய 11-ம் வயதில், அவர் டோக்கியோ நகரத்துக்கு குடியேறினார். குழந்தைப் பருவத்திலேயே மேதையாக கருதப்பட்டாலும், பல்வேறு துன்பங்களை அவர் சந்தித்தார். 

அதன் காரணமாக, தான் வலிமையானவராக வேண்டி, பழங்கால தற்காப்புக் கலையான ஜூஜிட்ஸூ தற்காப்பு கலையை கற்க ஆரம்பித்தார்.

ஜூஜிட்ஸூ கலையை பயிற்றுவிக்கும் ஆசிரியரும் முன்னாள் சாமுராயுமான  புகூடா ஹச்சினோ-சுகேவிடம் அந்த கலையை கற்று தேர்ந்தார்.

உருவான விதம் :

கனோ ஜிகோரோ, தான் பங்கேற்ற ஒரு ஜூஜிட்ஸூ போட்டியின் போது, மேற்கத்திய மல்யுத்த போட்டிகளில் பின்பற்றப்படும் சில நகர்வு முறைகளை இணைத்து சண்டையிட்டார். அதன்மூலம், எதிராளியை வீழ்த்தி வெற்றி கண்டார். 

ஜூஜிட்ஸூ தற்காப்பு கலையில், பல அபாயகரமான சண்டை முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு, பாதுகாப்பான விளையாட்டு முறையாக ஜூடோ கலையை உருவாக்கினார்.

அவரின் தனித்துவமான தத்துவங்களான செய்ர்யோகு-ஸென்யோ மற்றும் ஜிடா-க்யோஎய் ஆகியவற்றை சார்ந்து இந்த கலையை உருவாக்கினார்.

கூகுள் டூடுலில் பதிவு :

ஜூஜிட்ஸூ தற்காப்பு கலையின் மேம்படுத்தப்பட்ட மற்றும் மாறுபட்ட வடிவமாக ஜூடோ உருவானது. 

அதன்மூலம், நீதி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் அடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டாக ஜூடோவை மாற்றினார்.

பேராசிரியர் ஜிகோரோவின் 161-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஓவியர் சிந்தியா யுவான் செங் என்பவரால் இந்த கூகுள் டூடுல் பதிவிடப்பட்டுள்ளது.
*

Share this story