5 நகராட்சிகள் தரம் உயர்வு : தமிழக அரசு உத்தரவு
 

govt66

தமிழகத்தில் 5 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, செங்கல்பட்டு நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய 2-ம் நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. மேலும் பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய முதல் நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

தேர்வு நிலை நகராட்சியாக உள்ள திருவேற்காடு, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story