ஒமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி தயார் : அறிவிப்பு விவரம்..

Vaccine ready for Omigron virus Announcement details ..

கொரோனா வகை வைரசில், எத்தகைய திரிபுகள் ஏற்பட்டாலும், அவற்றை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தவை ஸ்புட்னிக் தடுப்பூசி என்றும், தேவைப்பட்டால் லட்சக்கணக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை தயாரிக்க இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் நிர்வாக அதிகாரி கிரில் டெம்ட்ரிவ்  கூறியதாவது :

கமலேயா இன்ஸ்டிடியூட், கவலைக்குரிய  ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக தடுப்பூசிகளை உடனடியாக தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒமிக்ரானுக்கான தடுப்பூசியை  45 நாட்களில் பெருமளவில்  தயார் செய்ய முடியும்.

ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் மற்ற பிறழ்வுகளுக்கு எதிராக மிக உயர்ந்த செயல்திறனைக் கொண்டிருப்பதால், ஒமிக்ரானை  தடுக்கும் என  கமலேயா நிறுவனம் நம்புகிறது. பிப்ரவரி 20, 2022க்குள் பல ஸ்புட்னிக் ஒமிக்ரான் பூஸ்டர்களை வழங்குவோம்.

உலகிலேயே முதன்முதலில் ,மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி ரஷியாவின் ஸ்புட்னிக்-வி. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், ரஷியாவில் இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இரண்டு டோஸ்கள் கொண்டது. 

வலுவிழந்த வைரஸை உடலுக்குள் செலுத்தி, அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பம்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. 

இந்த தடுப்பூசியை, 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் பராமரிக்கலாம். அதாவது, வழக்கமாக பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியே போதும்' என்றார்.

Share this story