சிங்கிள்ஸ்களுக்கு காதலர் தின போனஸ் : மேயர் அறிவிப்பு
 

pach

பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் லூனா நகரத்தின் மேயர் மாட் புளோரிடோ காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி அசத்தி உள்ளார்.

சிங்கிள் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்காக மேயர் தனது பாராட்டுக்களுடன் போனசும் வழங்கியுள்ளார். குறிப்பாக, 5 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்களது தினசரி ஊதியத்தை மூன்று மடங்காகவும், மற்ற ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும் வழங்கப்படுகிறது. அல்லது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மேயர் மாட் புளோரிடோ கூறுகையில், " காதலர் தினத்தன்று சிங்கிள்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அவர்களின் நிலையை உணர்கிறேன்.

காதலர் தினத்தன்று யாரும் அவர்களுக்கு சாக்லேட், பூக்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு இதுபோன்ற ஊக்கத்தொகையை வழங்க நினைத்தோம். இதன் மூலம்,யாராவது தங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள், யாரோ தங்களை நேசிக்கிறார்கள் என்பதை அவர்களால் உணர முடியும்" என்றார்.

மேயர் புளோரிடோ தனது ஊழியர்களுக்கு காதலர் தின போனஸை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறார். 289 டவுன்ஹால் ஊழியர்களில், 37 பேர் தாங்கள் சிங்கிள் தான் என்பதை உறுதி செய்த பிறகு இழப்பீட்டிற்கு தகுதி பெற்றனர்.

மேலும், தகுதியான ஊழியர்களிடம் அவர்களது கடைசி உறவு, பிரிந்ததற்கான காரணம் மற்றும் அவர்கள் ஏன் இன்னும் தனிமையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
 

Share this story