விஜய், திரிஷாவின் உடல் நிலை பரிசோதனை செய்திடனும்.! - வீரலட்சுமி புகார்..

By 
vll

தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறையில் கொடுத்துள்ள புகார் மனுவில்,

கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் இளைய சமூகம் சீரழிகின்ற வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மற்றும் இன்றி இளம் சிறார்கள் மத்தியில் தடைச் செய்யப்பட்ட மிக கொடிய போதை பொருள் விஸ்த்துக்கள் வந்துள்ளது. இதனால் மாணவர்களின் உடல்நலன், கல்வி, அறிவு, நாசமாகி போகிறது. இதனால் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த போதைப்பொருள் குறித்து அதனால் ஏற்படும் விளைவுகளை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்தில் இருக்கக்கூடிய (கலைத்துறையினர்). சினிமாத்துறையினர் துளியும் இந்த மக்கள் மீதும் இளைய சமூகத்தின் மீதும் இளைய சிறார்கள் மீதும் மாணவர்கள் மீதும் அக்கரை இல்லாததாலும் தன்னுடைய பொறுப்பை உணராமல் போனதாலும், தன்னுடைய சுக போக வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி இந்த சமூகமும், இந்த மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும் நமக்கு என்ன என்று எண்ணத்தோடு அலட்சியத்தோடும். 

பிரபல நடிகர் நடிகைகளான நடிகர் தனுஷ், விஜய், விஜய் யேசுதாஸ். திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் ஆகிய இவர்கள் விருந்து நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கொக்கேன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா பல்வேறு Youtube சேனலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதனால், பொதுமக்கள் இடையே இந்த கொக்கேன் என்ற போதை பொருள் பயன்படுத்தினால் இளைய சமூகத்தின் இடையே மாணவர்கள் இடையே அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்காது என்று எண்ணம் உருவாகியுள்ளது அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. 

பாடகி சுசித்ரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் கொக்கேன் பயன்படுத்தினரா என்று உடல் பரிசோதனை செய்து இந்த கொக்கேன் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கப்பெற்றது இவர்களுக்கு கொக்கேன் கொடுத்த அந்த போதை பொருள் கும்மல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினரை பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக வீரலட்சுமி தனது புகாரில் கூறியுள்ளார்.

 

Share this story