விஜய் சேதுபதி-ஸ்ரீசாந்த் சந்திப்பு : புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை..

Vijay Sethupathi-Sreesanth meeting Talks to act in new film ..

விஜய்சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. 

தற்போது, 12 படங்கள் கைவசம் வைத்துள்ளார். மற்ற நடிகர்கள் படங்களில் வில்லனாகவும் நடிக்கிறார்.

இந்நிலையில், விஜய்சேதுபதியை பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சந்தித்துப் பேசியுள்ளார். 

அந்த புகைப்படங்களை ஸ்ரீசாந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, 'உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா' என்று பதிவிட்டு உள்ளார். ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

புதிய படத்தில் விஜய்சேதுபதியுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இதுகுறித்து இருவரும் இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் பரவி வருகிறது. 

புதிய படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி, சர்ச்சைகளுக்குப் பின்னர், அப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this story