ரத்த வெறியை தூண்டும் விஜய் பட பாடல்..! டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்.. 

By 
coot

விஜய் முதல்முறையாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". இந்த திரைப்பட த்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், நேற்று இந்த திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் மதன் கார்க்கி  வரிகளில் வெளியானது. 

இந்த பாடல் வெளியானதில் இருந்து அவருடைய ரசிகர்கள் அதனை மிகப்பெரிய அளவில் வைரலாக மாற்றி வரும் நிலையில், தற்போது "விசில் போடு" பாட்டுக்கு எதிராக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில்... "நடிகர் விஜய் அவர்கள் பிரச்சினையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்". 

"தற்பொழுது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகி உள்ள விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டதிட்டத்தின்படி போதைப்பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம்பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும், ஆனால் நடிகர் விஜய் அதை செய்யவில்லை". 

"அதிரடி கலக்கட்டுமா? சேம்பைன தான் திறக்கட்டுமா? தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் மற்றும் ரவுடிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது". 

"மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியல் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், நடிகர் கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது". 

"இடி இடிச்சா என் வாய்ஸ்ல தான்.. வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்", நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டும் தொனியில், வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் நடிகர் விஜய்". என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story