தொடரும் வன்முறை : இன்று, விவசாயிகள் ரயில் மறியல்..
 

Violence continues Farmers strike today

லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்யவேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, பாஜகவினர் சென்ற கார் மோதியதில் விவசாயிகள் உயிரிழந்தனர். 

இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. மொத்தம் 4 விவசாயிகள், 2 பாஜகவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய ரெயில் மறியல் போராட்டம் நடத்த, சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 

இதன் காரணமாக, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.*

Share this story