7 கட்டங்களாக வாக்குப்பதிவு.! வேட்பு மனு தாக்கல் நாள் என்ன? முழு தகவல்கள் இதோ..

By 
vote4

தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின் படி ஏழு கட்டமாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குறித்த முக்கிய விவரங்களை பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில் இந்தியாவில் ஏழு கட்டமாக மக்களவைத் தேர்தல்கள் நடைபெறும் என்றும் ஆந்திராவில் மே 13ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார் ராஜிவ்குமார். ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழகத்திற்கு ஏப்ரல் 19ஆம் தேதியே தேர்தல் நடைபெறும். 

7 கட்ட வாக்கு பதிவு முடிந்த பிறகு ஜூன் 4ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விலங்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் பத்தாம் 9ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற மார்ச் மாதம் 20ஆம் தேதி புதன்கிழமை முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு தாக்கலை செய்ய துவங்கலாம்.

அதேபோல மார்ச் மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மார்ச் 28ஆம் தேதி வியாழக்கிழமை இந்த வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு, அவற்றை திரும்ப பெற மார்ச் 30ஆம் தேதி சனிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்படும் என்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து ஏழு கட்டமாக நடக்க உள்ள மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் துவங்கும். தமிழகத்திற்கு முதற்கட்டத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும், இறுதியாக ஜூன் 4ம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு கட்டமாக நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் முதல் கட்டத்தில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும், அதேபோல இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 12 மாநிலங்களில் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக 10 மாநிலங்களில் மே 13 ஆம் தேதியும், ஐந்தாம் கட்டமாக ஆறு மாநிலங்களில் 20ம் தேதியும், ஆறாம் கட்டமாக 7 மாநிலங்களில் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்டமாக ஆறு மாநிலங்களில் ஜூன் 1ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் 4 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 60 சட்டமன்ற மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி இரண்டு தேர்தலும் நடக்கும். 32 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சிக்கிமில் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடக்கும். 

ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும். ஒடிசாவில் இரண்டு கட்டங்களாக 42 தொகுதிகளுக்கு மே 25ஆம் தேதியும், 42 தொகுதிகளுக்கு ஜூன் 1ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Share this story