நாங்கள் மோடியின் குடும்பம்: வாரணாசி வீடுகளில் வைக்கப்படும் பதாகைகள்..

By 
vara2

பிரதமர் மோடி போட்டியிட போகும் வாரணாசி தொகுதியில் உள்ள வீடுகளில் நாங்கள் மோடியின் குடும்பம் என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மோடிக்கு குடும்பம் இல்லை என்று கூறியதை அடுத்து சமீபத்தில் மோடி தனது சமூக வலைதளத்தில் மோடியின் குடும்பம் என்ற அடைமொழியை சேர்ந்திருந்தார்.

மேலும் பாஜக தலைவர்களும் நாங்கள் மோடியின் குடும்பம் என்ற அடைமொழியை சேர்த்துவரும் நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக அவரது தொகுதி மக்களும் தற்போது இதில் கைகோர்த்துள்ளனர்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியை சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு வாசலில் ’நாங்கள் மோடியின் குடும்பம்’ என்று எழுதப்பட்ட பதாகைகள் வைக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Share this story