கேப்டன் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்? அப்பா பற்றி பேசி கதறி அழுத விஜய பிரபாகரன்..

By 
vpvp

கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விஜயபிரபாகரன் கண்ணீர் விட்டு பேசியது அனைவரது கண்களையும் குளமாக்கியது.

விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு, அவரது இரண்டு மகன்களும் வருகை தந்திருந்தனர். மேடைக்கு வந்து விஜயபிரபாகரன் பேசிய போது, "பேரன்பு கொண்ட பெரியோர்களே... தாய்மார்களே... அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே... இளைஞர்களே.. பொதுமக்களே.. என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே மற்றும் திரையுலக பிரமுகர்களே உங்கள் எல்லோருக்கும் என் முதல் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என கூறி இந்த சொல்லுக்கு சொந்தக்காரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். இனி என் மூலம் இனி தமிழ்நாடு முழுவதும் இந்த வார்த்தை ஒளித்துக்கொண்டே இருக்கும். இதனை நான் சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் சின்ன வயதில் இருந்து, என் முகத்தை கண்ணாடியில் பார்த்ததை  விட எங்க அப்பாவ தான் நான் நிறைய தடவை பார்த்திருக்கிறேன் என்று கூறி கண்கலங்கினார் விஜய பிரபாகரன். நான் அழுகிறேன் என தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் கூறி பேச முடியாமல் துக்கத்தில் அவருக்கு தொண்டை அடைத்தது. அப்பா என்றால் மிகவும் ஏமோஷ்னல் ஆகிவிடுவேன். என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  கேப்டன் எங்கேயும் போகவில்லை. நம்முடன் தான் இருக்கிறார். 

நான் அப்பா இறந்ததில் இருந்து, இதனால் வரைக்கும் எந்த ஒரு மீடியாவிலும் பேசவில்லை. யார்கிட்டயும் பேசல. இதுதான் என்னுடைய ஃபர்ஸ்ட் மீட்டிங். இதுதான் முதல் முறையாக நான் வெளியே வந்து பேசும் நிகழ்ச்சி. அதே போல் எந்த ஒரு நடிகர் சங்க விழாக்களிலும் நானும், தம்பி சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. இதுதான் முதல் நிகழ்ச்சி. அது இப்படி ஒரு நிகழ்ச்சியாக இருப்பது உண்மையிலேயே மனசு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

நான் பல விஷயங்கள் பேசணும் என நினைத்தேன். ஆனால் இப்போதைக்கு எதுவும் எனக்கு பேச தெரியவில்லை. மனதில் பட்டதை பேசுகிறேன். எங்களுக்கு எல்லோருக்கும் சின்ன வயசுல இருந்து கொடுக்க சொல்லி கொடுத்து வளர்த்துருக்காரு எங்க அப்பா. அதனால் என்னைக்குமே அது மாறாது. அம்மா இதை தான் வீடியோவிலும் சொல்லியிருந்தாங்க. இனி கேப்டன் இல்லை, இனி யார் எங்களுக்கு இருக்காங்க அப்படின்னு யாரும் நினைக்காதீங்க... உங்களுக்காக தான் எங்க அப்பா எங்கள விட்டுட்டு போய் இருக்காரு. 

எங்க அப்பாவுடைய கனவு என்னவோ, அதை நிறைவேற்ற தான் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் இங்கே இருக்கோம். இதை நான் மிகவும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். இந்த புத்தாண்டின் போது, என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு என் குடும்பத்தில் எல்லோரும் வீட்டில் தான் இருந்தோம். அப்போது சில விஷயங்கள் நாங்கள் ஷேர் பண்ணினோம். அப்போ இந்த ஆண்டு ரெசல்யூஷன் சொல்றப்போ நான் அப்பா கிட்ட சில விஷயங்கள் பர்சனலா பேசினேன். மத்த வருடங்களை விட இந்த வருடம் நான் சொன்ன விஷயங்கள் எனக்கும் என் அப்பாவுக்கு மட்டுமே தெரியும். அது என்ன என்பதை காலம் உங்களுக்கு சொல்லும்.

கடந்த பத்து வருடமா கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டார்.  இந்த பத்து வருஷமா யாராக இருந்தாலும் இந்த அளவுக்கு தாங்கி இருப்பார்களா? என்று தெரியவில்லை. அதனால் தான் நான் ஒவ்வொரு மீட்டிங்கிலும் சொல்வேன்... குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்று. இந்த 71 வயசு வரைக்குமே, அவர் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்றால், அது அவருடைய மன உறுதி தான். சில youtube தளங்களில் விஜயகாந்த் பற்றி தவறான செய்திகள் வெளியாகின்றன. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை.

எங்கள் அப்பாவுக்கு கடைசி வரைக்கும் எல்லாமே ஞாபகம் இருந்துச்சு. எல்லாரையுமே அவர் ஞாபகம் வைத்திருந்தார். இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எங்க வீட்ல வேலை செஞ்சுட்டு இருக்கும் குமார் அண்ணன், சோமு அண்ணன் என ரெண்டு பேர் கிட்டயும் அவருடைய பட பாடல்கள் எல்லாத்தையும் போட்டு கொடுக்க சொல்லி தாளம் போட்டு ரசிச்சிருக்காரு. அவங்க சொன்ன பின்னர் சிசி டிவி பார்க்கும் போது தான் இதுவே எங்களுக்கு தெரியும்.

இந்த முறையும் வந்திடுவார் என்று தான் நினைத்தோம். ஆனால் வர்ல கேப்டன் சொன்ன மாதிரி விஜயகாந்த் வாழ்ந்தார், இருந்தார், வாழ்ந்து கொண்டு இருப்பார். இந்த மக்களுக்காக என்று சொல்லி விடை பெறுவதாக விஜயகாந்த் மகன் தெரிவித்தார்.  அப்பாவுக்காக இப்படி ஒரு விஷயத்தை செய்வதற்கு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிலர் வந்திருக்கலாம், வராமல் போயி இருக்கலாம் ஆனால் எங்களுக்கு யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. என்பதையும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Share this story