கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம் என்ன? : நிபுணர்கள் எச்சரிக்கை 

corona4

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவ தொடங்கி இரண்டரை ஆண்டுகளாக பல அலைகளாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில், சமீப மாதங்களாக தொற்று பெருமளவில் குறைந்து இருந்தது.

கொரோனாவின் டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் உள்ளிட்ட பல்வேறு உருமாறிய வைரசுகளால் நாட்டில் விரைவாக பரவல் மற்றும் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 117 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 600-க்கு கூடுதலாக பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,197 ஆக அதிகரித்து உள்ளது என தெரிவித்தது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பதிவான கொரோனா பாதிப்புகள் 618 ஆக உள்ளது. 5 பேர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 5,30,789 ஆக உயர்ந்து உள்ளது என்றும் தெரிவித்தது. இதற்கு முக்கிய காரணியாக நாட்டில் எக்ஸ்.பி.பி.1 என்ற உருமாறிய கொரோனா வகையில் இருந்து வழிதோன்றலாக உருவான எக்ஸ்.பி.பி.1.16 மற்றும் எக்ஸ்.பி.பி.1.5 ஆகியவை இந்தியாவில் அதிகளவில் பரவி உள்ளது.

மராட்டியம் மற்றும் குஜராத்தில் இதன் பாதிப்புகளால் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என தெரிய வந்து உள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் 48 பேருக்கும், இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றவர்களில் புரூணையில் (22), அமெரிக்காவில் (15) மற்றும் சிங்கப்பூரில் (14) அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த வகை வைரசானது இந்தியாவில் தோன்றியிருக்க கூடும் என அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ள நிபுணர்கள் மற்ற பிற சார்ஸ்-கோவி-2 பரவலை விட இறுதியில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இது இருக்கும் என்று எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

Share this story