வெற்றி துரைசாமியின் நிலை என்ன.? ரத்த மாதிரிகள் சேகரிப்பு..

By 
vd

இமாச்சல் பிரதேசத்தில் வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில், அவரது பெற்றோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் சிக்கினார். அவர் சென்ற கார் சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதில் கார் ஓட்டுநர் பலியான நிலையில், வெற்றி துரைசாமியின் நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமி மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி தொடர்ந்து 8-வது நாளாக இன்று நீடித்து வருகிறது.
 
சட்லஜ் ஆற்றில் பாறை இடுக்குகளில் கிடைத்த மனிதமூளையின் பாகங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சைதை துரைசாமியின் மகன் வெற்றியுடையதா என்பது குறித்த டி.என்.ஏ ஆய்வு முடிவு வெளியாகிறது.

இதையொட்டி சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது.
 

Share this story