சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரேசன் கடை எப்போது திறப்பு.? வெளியான தகவல்..

By 
ras2

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதில், சென்னை  நகர் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பல  இடங்களில் வெள்ளத்தால்  இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.   இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்கி வருகிறது.

இந்த  நிலையில்  நாளை மறுநாள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியை சென்னை வேளச்சேரியில் அஷ்டலட்சுமி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்கவுள்ளார்.

தற்போது இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த  நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் ரேசன் கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Share this story