என் கணவருக்கு 500 பெண்களுடன் தொடர்பு: கோர்ட்டில் மனைவி மனுத்தாக்கல்.. 

By 
5001

கணவருக்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அந்த மனுவில்: எனக்கும் விவேக்ராஜ் என்பவருக்கும் திருமணம் ஆகி சேர்ந்து வாழ்ந்து வந்தோம்.  

இந்நிலையில் எனது கணவரின் செல்போனை எதார்த்தமாக எடுத்து பார்த்தபோது, அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன்ஷாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் படங்களை வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

மேலும் கணவர் வங்கியில் வேலை பார்ப்பதால் அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் பேசி பழகி சுமார் 500 முதல் 1000 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.  இது தொடர்பாக தனது கணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் கூறியபோது, இதை பற்றி வெளியே யாரிடமாது கூறினால் கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டினர்.

மேலும் தன்னை இரண்டு மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் அடித்து துன்புறுத்தியதால் கரு சிசுவிலேயே கலைந்து விட்டது. இது தொடர்பாக தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  ஆனால் புகார் தொடர்பாக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

எனவே எனது கணவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது தஞ்சை மகளிர் போலீசார் விசாரணைக்கு  தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுகுமார குரூப் முன்பு விசாரணை வந்தது. அப்போது  இந்த மனு குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி தரப்பு காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  நீதிபதி ஒத்திவைத்தார்.

Share this story