அண்ணாமலை மத்திய அமைச்சராகிறாரா.? தமிழகத்தில் யாருக்கெல்லாம் பதவி கிடைக்கும்.? வெளியான புதிய தகவல்..

By 
modimalai

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும்  இந்தியா கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் தொங்கு பாராளுமன்றம் உருவாகியுள்ளது.  இதன் காரணமாக பாஜக மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க ஆந்திரா மாநில தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் பீகாரிலிருந்து நிதிஷ்குமாரும் தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். 

இன்னும் ஓரிரு நாட்களில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.  இந்த சூழ்நிலையில் புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட உள்ளது.  கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சில டம்மியான இலாக்கக்கள் ஒதுக்கப்பட்டது.  பெரும்பான்மை பெற்ற பாஜகவில் முக்கிய தலைவர்களுக்கு முக்கியத் துறைகளும் ஒதுக்கப்பட்டு இருந்தது.  

ஆனால் தற்போது நித்திஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை நம்பியே பாஜக ஆட்சி அமைவதால் அந்த இரண்டு கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.  அதேபோல மற்ற கூட்டணி கட்சி சேர்ந்தவர்களுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாஜக ஜனதா கட்சி சார்பாக எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெறாத நிலையிலும் பாஜக மூத்த தகவர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டது அந்த வகையில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல் முருகன் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. மேலும் தேர்தலில் தோல்வியடைந்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு இரண்டு மாநிலத்திற்கான ஆளுநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லவில்லை எனவே தற்போது அமைச்சரவை உருவாக்கக்கூடிய சூழ்நிலையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.  அந்த வகையில் மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.  அடுத்ததாக தற்போது ராஜ்யசபா எம்பி ஆக இருக்கும் எல் முருகனுக்கும் அமைச்சரவை பதவி வழங்கப்படும் என தெரிகிறது. 

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வானதி சீனிவாசன் அல்லது நயினார் நாகேந்திரன் இருவரில் ஒருவருக்கு மாநில தலைவர் பதவி  வழங்கப்படலாம் என தெரிகிறது. தற்போது தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதத்தை உயர்ந்த்திய அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் இன்னும் சில நாட்களில் உறுதியாகவும் கூறப்படுகிறது.  ஆனால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் வகையில் மாநில தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் பாஜக வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது

Share this story