ரயில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுமா? : பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

stalin777

பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர்மோடி பங்கேற்றார். அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு நன்றி. மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு தரும்போது தான் நாடு வளர்ச்சி அடையும். மத்தியில் கூட்டாட்சி இருக்க வேண்டும் என்றால் மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்.

வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தேவை. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்துக்கு தேவையான போதிய ரெயில்வே திட்டங்கள் வழங்கப்படவில்லை.

மக்களுக்கு நெருக்கமாக மாநிலங்கள் தான் இருக்கிறது. மக்களின் தேவையை மாநில அரசுதான் நிறைவேற்ற முடியும் என தெரிவித்தார்.

Share this story