இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
 

marriage7

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.

ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் குறிப்பாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அட்டை ஆகியவற்றுடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Share this story